தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில், சிங்கபெருமாள்கோவில் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், வரும் 16, 17,18 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு வரும் 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் இரவு 8.01 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள்கோவில் }செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு வரும் 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு வரும் 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் இரவு 9.18 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு அக்டோபர் 15, 16, 17,18 ஆகிய தேதிகளில் இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-சிங்கப் பெருமாள்கோவில் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.