சிங்கபெருமாள் கோவில் - காட்டாங்கொளத்துார் இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள், இன்று(அக் 16) மற்றும் நாளை(அக் 17), பாதி வழியில் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

* சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக, மீண்டும் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் வட்ட பாதை ரயில், இன்றும், நாளையும், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்

* கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை, 9:32 மணி மற்றும் 10:56 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்

* கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு காலை, 10:08 மணி மற்றும் 11:48 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்

* செங்கல்பட்டில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 10:30 மணிக்கு இயக்க வேண்டிய ரயில், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், கூடுவாஞ்சேரி - கும்மிடிப்பூண்டி இடையே மட்டும் இயக்கப்படும்

* செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு, காலை, 11:30 மணி, மதியம், 1:00 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள், கூடுவாஞ்சேரி - கடற்கரை இடையே மட்டும் இயக்கப்படும்

* செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 10:55 மணி, பகல், 12:20 மணிக்கு இயக்க வேண்டிய ரயில்கள், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன

* கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, இரவு, 8:01 மணி, 9:18 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், இன்று முதல், நாளை மறுநாள் வரை, சிங்கபெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்

* செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, இரவு, 10:15 மணி, 11:10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், இன்று முதல், நாளை மறுநாள் வரை, செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுஉள்ளன. இந்த ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் - கடற்கரை நிலையம் இடையே மட்டும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி ரயில்கள் ரத்து!தண்டையார்பேட்டை - எண்ணுார் இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ன.

* சென்னை, சென்ட்ரல் மூர் மார்க்கெட் நிலையத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு அதிகாலை, 12:15 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்ட்ரலுக்கு அதிகாலை, 2:45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன

* சென்னை, சென்ட்ரலில் இருந்து, ஆந்திர மாநிலம், சூலுார்பேட்டைக்கு அதிகாலை, 5:30 மணிக்கும், சூலுார்பேட்டையில் இருந்து, ஆந்திர மாநிலம், நெல்லுாருக்கு, காலை, 8:00 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், வரும், 19ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன

* நெல்லுாரில் இருந்து, சூலுார்பேட்டைக்கு, காலை, 10:00 மணிக்கும், சூலுார்பேட்டையில் இருந்து நெல்லுாருக்கு, பகல், 12:00 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், வரும், 19ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.