மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக அக்டோபர் 13ம் தேதி ரயில் சேவையில் மாற்றம்.

காலை 7:10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண்.56319 நாகர்கோவில் – கோவை பயணிகள் ரயில், மறு மார்க்கத்தில் இருந்து காலை 7:20 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56320 கோவை– நாகர்கோவில் பயணிகள் ரயில், கோவில்பட்டி – திண்டுக்கல் ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையில் இருந்து முற்பகல் 11:50 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 56734 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் மற்றும் மதுரையிலிருந்து மாலை 5:00 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 56735 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் ஆகியவை அக்.13 அன்று மதுரை – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காட்டில் இருந்து அதிகாலை 4:10 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 56769 பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் மற்றும் திருச்செந்தூரில் இருந்து முற்பகல் 11:40 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் ஆகியவை அக்.13 அன்று திண்டுக்கல் – திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

www.tnrailnews.in