எர்ணாகுளம் - ராமேஸ்வரம் இடையே அக்டோபர் 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த சிறப்பு ரயில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு காலை 4:10/4:15 வந்து செல்லும். மேலும் இந்த ரயில் ராமேஸ்வரத்திற்கு பகல் 11:05க்கு செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ரயிலின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து அக்டோபர் 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு இரவு 11:20/11:25 வந்து செல்லும். மேலும் இந்த ரயில் ராமேஸ்வரத்திற்கு காலை 7:30க்கு சென்றடையும்.