கோயம்பத்தூர் - சேலம் தடத்தில் பராமரிப்பு பணி - ரயில் சேவையில் செப் 19ம் தேதி மாற்றம்.  1. கோயம்பத்தூரில் இருந்து காலை 9:05க்கு புறப்படும், 66602 கோவை - சேலம் பயணிகள் ரயில், செப் 19ம் தேதி ஊத்துக்குளி - சேலம் இடையே ரத்து.
  2. சேலத்தில் இருந்து பிற்பகல் 1:40க்கு புறப்படும், 66603 சேலம் - கோவை பயணிகள் ரயில், செப் 19ம் தேதி சேலம் - ஊத்துக்குளி இடையே ரத்து.
  3. 12244 கோயம்பத்தூர் - சென்னை சென்ட்ரல் சதாப்தி ரயில், செப் 19ம் தேதி கோவை - திருப்பூர் இடையே சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயங்கும்.
  4. 12676 கோயம்பத்தூர் - சென்னை சென்ட்ரல் 'கோவை' அதிவிரைவு ரயில், செப் 19ம் தேதி கோவை - திருப்பூர் இடையே சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயங்கும்.
  5. 22648 திருவனந்தபுரம் - கோர்பா அதிவிரைவு ரயில், செப் 19ம் தேதி கோவை - திருப்பூர் இடையே சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயங்கும்.
  6. 22815 பிலாஸ்பூர் - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில், செப் 19ம் தேதி திருப்பத்தூர் - ஈரோடு இடையே சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயங்கும்.

மேற்கொண்ட தகவலை சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
ரயில் செய்திகளை வாட்ஸாப்பில் பெற
+916385195419
மேற்கொண்ட எண்ணை வாட்ஸாப் குழுவில் சேர்க்கவும்
புதியது பழையவை