ஹம்ஸபார் குளிர்சாதன ரயில்களில் இனி இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்க வாரியம் அனுமதி. மேலும் கட்டணம் குறைப்பு

நாடு முழுவதும் 35 ஜோடி ஹம்ஸபார் குளிர்சாதன விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் சாதாரண அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்களை காட்டிலும் கூடுதலாக 1.15 விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும் 50% சதவிகித இருக்கை முன்பதிவு முடிவடைந்தவுடன் 1.5 விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ரயில்களில் கட்டணங்களை குறைக்கவும், கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை இணைக்கவும் ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

அதன்படி, இந்த ரயில்களில் இனி அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்களின் கட்டணங்களை விட 1.15 விகிதத்தில் கூடுதலாக மட்டும் வசூலிக்கப்படும். பன்மடங்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தட்கல் டிக்கெட்டிற்கு 1.3 விகிதத்தில் கட்டணம் வசூலிக்கவும் ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

மேலும் இந்த வசதிகளை 120 நாட்களுக்கு முன் அதாவது முன்பதிவு துவங்கும் முன் நடைமுறைப்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து அல்லது தமிழகம் வழியாக செல்லும் ஹம்ஸபார் ரயில்களின் விவரம்.

  • 16319/20 கொச்சுவேலி - பனஸ்வாடி(பெங்களூரு) - கொச்சுவேலி : வழி கோவை, ஈரோடு, சேலம்
  • 12503/04 பெங்களூர் கண்டோன்மெண்ட் - அகர்தலா - பெங்களூர் : வழி காட்பாடி, சென்னை பெரம்பூர்
  • 22353/54 பாட்னா - பனஸ்வாடி(பெங்களூரு) - பாட்னா : வழி காட்பாடி, ஜோலார்பேட்டை
  • 22887/88 ஹௌரா - யஸ்வந்த்புர்(பெங்களூர்) - ஹௌரா : வழி காட்பாடி
  • 22497/98 ஸ்ரீ கங்காநகர் - திருச்சி - ஸ்ரீ கங்காநகர் : வழி சேலம், நாமக்கல், கரூர்
  • 22833/34 புவனேஸ்வர் - கிருஷ்ணாராஜபுரம்(பெங்களூர்) - புவனேஸ்வர் : வழி காட்பாடி, ஜோலார்பேட்டை
  • 22919/20 சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் - சென்னை சென்ட்ரல்
  • 19423/24 திருநெல்வேலி - காந்திதாம் - திருநெல்வேலி : வழி நாகர்கோவில் டவுன்
  • 14815/16 பகத் கி கோத்தீ(ஜோத்பூர்) - தாம்பரம் - பகத் கி கோத்தீ : வழி சென்னை எழும்பூர்