வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளை கருப்பு பெயிண்ட் மூலம் அழித்த திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.மத்திய அரசு இந்தியை கட்டாயமாக திணிக்க முயற்சிப்பதாக கூறி முழக்கங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் குடியாத்தம் என இந்தி மொழியில் இருந்த எழுத்துகளை கருப்பு பெயிண்ட் மூலம் அழித்தனர். மற்ற இடங்களில் இருந்த இந்தி எழுத்துகளும் அழிக்கப்பட்டன.
இதையடுத்து குடியாத்தம் திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ஞானபிரகாஷ் உட்பட 25க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதியது பழையவை