கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் திண்டுக்கல்லுடன் திரும்பும்


கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் இரு மார்க்கத்திலும் முழுமையாக இயங்காமல், பயணிகளுக்கு தொடர்ந்து பூச்சாண்டி காட்டி வருகிறது. சில நாட்கள் திண்டுக்கல்லுடன், மதுரையுடன், கரூருடன் ரயில் திரும்பியது. அதே போல், நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் விருதுநகர், மதுரையுடன் திரும்புகிறது. முழுமையான பயணத்தை நிறைவு செய்யும் நாட்கள் மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக சீசன் டிக்கெட் எடுத்த பயணிகள் கடந்த ஆறு மாதமாக ஏமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் இனி வியாழக்கிழமை மட்டுமே கோவை - நாகர்கோவில் இரு மார்க்கத்திலும் முழு அளவில் இயங்கும் என்றும். மற்ற ஆறு நாட்களும் இந்த ரயில் கோவையில் இருந்து திண்டுக்கல் வரையும், மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை மட்டுமே இயங்கும் என மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.