தமிழக இளைஞர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பை பெற போதிய விழிப்புணர்வு இல்லை என சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க பொதுசெயலாளர் கண்ணய்யா காட்பாடியில் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம்.காட்பாடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கத்தின் சார்பில்  ரயில்வேதுறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க பொது செயலாளர் கண்ணய்யா கலந்துகொண்டு  தொழிலாளர்கள் மத்தியில் பேசினார்.
பின்னர் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க பொதுசெயலாளர் கண்ணய்யா செய்தியாளர்களிடம் பேசுகையில்தமிழக இளைஞர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பை பெற போதிய விழிப்புணர்வு இல்லை.
தமிழக இளைஞர்கள் பிடெக் எம்டெக் போன்ற தொழில்நுட்ப கல்விகளை பயின்று ரயில்வே தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது . அதனை பெற்று ரயில்வே பணிகளில் சேர தமிழக இளைஞர்கள் ஆர்வமுடன் முன் வரவேண்டும்.
ரயில்வே தொழிலாளர்களுக்கு தனியார் மயமாக்கும் முயற்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். லாபத்தில் இயங்கும்  ரயில் வண்டிகளை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி ரயில் 97 கோடி ஆனால் 250 கோடி அதிகம் கொடுத்தும் தனியாருக்கு தர இருக்கின்றனர். இதனால் ரயில் கட்டணங்கள் கடுமையாக உயரும். பொருளாதார நிலைமையில் அடித்தட்டில் இருக்கும் மக்கள் ரயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் 850 டிக்கெட் ரூ.2 ஆயிரமாக உயரும் கோவை எக்ஸ்பிரஸ் செல்லும் அடித்தட்டு பாமர மக்கள் தனியாருக்கு ரயிலை கொடுத்த பின்னர் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.800 ஆக உயரும்.
இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். தனியார் மயமானால் இளைஞர்களுக்கு இனி ரயில்வேயில் வேலையே கிடைக்காது. தனியார் மயமாக்க ரயில்வேதுறை மாற்றப்பட்டால் ஆகவே மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.