குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

06047 தாம்பரம் - திருச்செந்தூர் சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 6ம் தேதி மாலை 4:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:20க்கு திருச்செந்தூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06049 தாம்பரம் - திருச்செந்தூர் சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 7ம் தேதி மாலை 4:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:20க்கு திருச்செந்தூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06050 திருச்செந்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில்.

திருச்செந்தூரில் இருந்து அக்டோபர் 9ம் தேதி இரவு 7:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06048 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.

திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 5ம் தேதி இரவு 9:40க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.