02198 ஜபல்பூர் - கோயம்பத்தூர் வாராந்திர விரைவு ரயில், அக்டோபர் 5, 12, 19, 26ம் தேதிகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 5மணிக்கு கோயம்பத்தூர் வந்து சேரும்.

02197 கோயம்பத்தூர் - ஜபல்பூர் வாராந்திர விரைவு ரயில், அக்டோபர் 7, 14, 21, 18ம் தேதிகளில் இரவு 7மணிக்கு கோவையில் புறப்பட்டு புதன்கிழமைகளில் பகல் 12:45க்கு ஜபல்பூர் சென்றடையும்.

இந்த ரயிலில் இரண்டு அடுக்கு குளிர் சாதனா பெட்டி ஒன்றும், மூன்று அடுக்கு குளிர் சாதன பெட்டி நான்கும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 11ம் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் முன்பதிவில்லா பெட்டிகள் 6ம் இருக்கும்.

மேற்கொண்ட தகவலை கொங்கன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஹெரிவித்துள்ளது.