சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் சார்பில் பல்வேறு ரயில் நிலையங்களிலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தூளாக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

இவற்றின் செயல்பாடு நேற்று துவக்கி வைக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முதுநிலை வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, கோவில்பட்டியில் வர்த்தக மேலாளர் எம்.பரத், மதுரையில்  உதவி வர்த்தக மேலாளர் நிறைமதி பிள்ளைக்கனி ஆகியோர் துவக்கி வைத்தனர்.