கோவை ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் வசதிக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவரும் ரயில்வே நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துாய்மைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், ஸ்டேஷன், 1ஏ நடைமேடை காம்பவுண்ட் சுவரில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் டெக்சிட்டி சார்பில், விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய நடனம், விவசாயம், கிராம வாழ்க்கை குறித்த ஓவியங்கள் பயணிகளை கவர்ந்து வருகிறது. காந்தியின் மிகப்பெரிய உருவமும் வரையப்படவுள்ளது.
செய்திகள் நன்றி - தினமலர்