இது குறித்து மேற்கு மாவட்டச் செயலர் டி.ஆர்.தங்கராஜ் ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலியில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி வழியாக தாம்பரத்திற்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி வருகிறது.
இந்த சிறப்பு ரயிலுக்கு பாவூர்சத்திரம், கடையம், அம்பை சுற்று வட்டார பகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் கிடைத்திருப்பது இப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சிறப்பு ரயில் தினந்தோறும் இயக்கினால் இப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். எனவே தினசரி இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.