கோவை ரயில் நிலையத்தில் நீண்ட காலமாக பெரும் பிரச்னையாக இருந்து வருவது இரு சக்கர வாகனங்களை நிறுத்த போதிய இடமின்மைதான்.. தற்போது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்து வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வருவதால் வாகன நிறுத்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள கூட்ஸ் சாலையின் பக்கம் அமைக்கப்பட்டுள்ள இந்த இருசக்கர பன்னடுக்கு வாகன நிறுத்தம் 4 தளங்களை கொண்டது. ஒவ்விரு தளத்திலும் 500 வாகனங்களை நிறுத்த முடியும். இது கட்டணமாக முதல் 4 மணி நேரம் நேரத்திற்கு 10 ரூபாய். அதன் பிறகு 4 - 12 மணி நேரம் வரை, 20 ரூபாய். 12 - 24 மணி நேரம் வரை, 25 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/mC_qvwAA