மதுரை
வழியாக கோவையிலிருந்து
ராமேஸ்வரம்,
துாத்துக்குடிக்கு
கூடுதல் ரயில்களை இயக்க
ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பயணிகள்
எதிர்பார்க்கின்றனர்.மீட்டர்
கேஜ் பாதையாக இருந்த போது
இந்த வழித்தடத்தில் அதிக
ரயில்கள் இயக்கப்பட்டன.
அகல
ரயில் பாதை அமைப்பதை காட்டி
இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன.
தற்போது
அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு
பல ஆண்டுகளாகியும் கூட இந்த
வழித்தடத்தில் கூடுதல்
ரயில்கள் இயக்கப்படவில்லை.சமீபத்தில்
எம்.பி.,க்களுடன்
தெற்கு ரயில்வே அதிகாரிகள்
ஆலோசனை நடத்தினர்.
சேலத்தில்
நடந்த கூட்டத்தில் ரத்தான
கோவை-ராமேஸ்வரம்,
துாத்துக்குடி
ரயில்களை இயக்க எம்.பி.,க்கள்
வலியுறுத்தினர்.
அதை
பரிசீலித்த சேலம் கோட்ட
ரயில்வே நிர்வாகம் இந்த
வழித்தடத்தில் ரயில்களை
இயக்க தெற்கு ரயில்வே
நிர்வாகத்திற்கு பரிந்துரை
செய்துள்ளது. கோவையில்
இரவு 10:30
மணிக்கு
புறப்பட்டு மறுநாள் காலை
8:30
மணிக்கு
ராமேஸ்வரம் செல்லும் வகையிலும்,
அங்கிருந்து
இரவு 10:30
மணிக்கு
புறப்பட்டு மறுநாள் காலை
8:00
மணிக்கு
கோவை செல்லும் வகையிலும்,
கோவையில்
காலை 9:00
மணிக்கு
புறப்பட்டு மாலை 5:30
மணிக்கு
துாத்துக்குடி செல்லும்
வகையிலும்,
அங்கிருந்து
மாலை 6:05
மணிக்கு
புறப்பட்டு கோவைக்கு மறுநாள்
காலை 9:45
மணிக்கு
செல்லும் வகையிலும் ரயில்களை
இயக்கலாம் என பரிந்துரையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மதுரை கோட்ட அதிகாரிகள் இந்த
வழித்தடத்தில் கூடுதல்
ரயில்களை இயக்குவது குறித்து
பரிசீலித்து வருகின்றனர்.தெற்கு
ரயில்வே மஸ்துார் யூனியன்
கோட்ட செயலர் ரபீக் கூறுகையில்,
''இந்த
வழித்தடத்தில் இயங்கி ரத்தான
ரயில்களை தான் தற்போது விட
வலியுறுத்தப்படுகிறது.
புனலுார்-
கொல்லம்
இடையே 45
கி.மீ.,
துாரத்திற்கு
ஒரு நாளில் 10
ரயில்கள்
இயக்கப்படுகின்றன.
பயணிகள்
போக்குவரத்து மிகுந்த
கோவை-ராமேஸ்வரம்,
துாத்துக்குடி
வழித்தடத்தில் கூடுதல்
ரயில்களை இயக்க அதிகாரிகள்
முன்வர வேண்டும்,''
என்றார்.தட்சிண
ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்
கோட்ட செயலர் சங்கரநாராயணன்
கூறுகையில்,
''மதுரை
மற்றும் சுற்றியுள்ள மக்கள்
வேலைக்காக கோவை மற்றும்
அருகிலுள்ள மாவட்டங்களில்
பணிபுரிகின்றனர்.
மதுரை
வழியாக கோவைக்கு பகல் மற்றும்
இரவில் தலா ஒரு ரயில் மட்டுமே
இயங்குகிறது.
கூடுதல்
ரயில்களை இயக்கினால் ரயில்களில்
கூட்ட நெருக்கடியை தவிர்ப்பதுடன்,
ரயில்வேக்கும்
கணிசமான வருவாய் கிடைக்கும்,''
என்றார்.
செய்திகள் நன்றி