கூடுதல் பணியால் சோர்வடையும் ரயில் ஓட்டுநர்களால், சில நேரங் களில் ரயில்கள் சிவப்பு சிக்னல் களைத் தாண்டும் நிலை ஏற்படு கிறது. எனவே, ரயில் ஓட்டுநர் களுக்கு பணி, ஓய்வுநேரம் குறித்து ஏற்கெனவே அளிக்கப்பட்ட பாது காப்பு கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென ரயில் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ரயில்வே துறையில் 12,000 பயணிகள் ரயில்கள் உட்பட மொத்தம் 21,000 ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் இருந்தாலும், ஓட்டுநர்கள் பிரிவில் காலிப் பணியிடங்கள் அதிகரிப்பது பயணிகளின் பாதுகாப்புக்கு அச் சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கவனக்குறைவு
ஓட்டுநர் பிரிவில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதில், தெற்கு ரயில்வேயில் மட்டும் 10 சதவீத காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால், தற்போதுள்ள ரயில் ஓட்டுநர்களுக்கு பணி பளுவை ஏற்படுத்தியுள்ளது. இடைவெளி இல்லாமல் ரயில் ஓட்டுநர்கள் பணியாற்றுவதால், சோர்வாகி விடுகின்றனர். கவனக் குறைவு ஏற்பட்டு சிவப்பு சிக்னல் கள் கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதுதொடர்பாக அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழக தென் மண்டலத் தலைவர் வி.பாலசந்திரன், இணை செய லாளர் கே.பார்த்தசாரதி ஆகியோர் கூறும்போது, ‘‘ரயில் ஓட்டுநர்களின் பணி, ஓய்வு நேரம் தொடர்பாக திரிபாதி கமிட்டி பல்வேறு பாதுகாப்பு பரிந்துரைகளை அளித்தது.
இதை அமல்படுத்தக் கோரி பல ஆண்டுகளாக நாங்கள் போராட்டங்கள் நடத்தியதன் மூலம் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, சில பரிந்துரை களை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. ஆனால், இதுவரை யில் அவை நிறைவேற்றப் படவில்லை.
வாரத்துக்கு 2 இரவு பணி, 46 மணி நேரம் வார ஓய்வு, 6 மணிநேரம் வேலை என விபத்துகள் இல்லாத வேலை சூழ்நிலையை உருவாக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரு கிறோம். ரயில் ஓட்டுநர்களின் அதிகபட்ச வேலை மற்றம் தேவையான அளவில் ஓய்வு இல்லாததால் தூக்க குறைபாடுகள் ஏற்படுகின்றன.

பொது சொத்துகளுக்கு பாதிப்பு
இதனால் அவர்களுக்கு மட்டு மல்ல, அவர்களை நம்பியுள்ள பயணிகள் மற்றும் பொது சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, ரயில் ஓட்டுநர்களுக்கு பணி, ஓய்வுநேரம் குறித்து ஏற்கெனவே அளிக்கப்பட்ட பாதுகாப்பு கமிட்டியின் பரிந்துரை களை அமல்படுத்த வேண்டும்’’ என்றனர்.