கோவை - பெங்களூருவுக்கு தினமும் ரயில் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட அறிக்கைகளை, சேலம் ரயில்வே கோட்டம், தென்னக ரயில்வே நிர்வாகத்திடம் அளித்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கூட்டம், கடந்த மாதம் நடந்தது. அதில் தெரிவித்த ஆலோசனைப்படி, பல்வேறு புதிய திட்ட அறிக்கை தயாரித்து, தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், மங்களூரு - கோவை இன்டர்சிட்டி ரயிலை, மேட்டுப்பாளையம் வரை நீட்டித்தல்; கோவை - ராமேஸ்வரம் இடையே, போத்தனூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக, தினமும் ரயில் இயக்குதல்; கோவை - பெங்களூரு இடையே, தினமும் இரவு நேர ரயில்; கோவை - தூத்துக்குடி இடையே தினமும் விரைவு பயணியர் ரயில் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தென்னக ரயில்வே அனுமதி வழங்கப்படும் திட்ட அறிக்கைகள், செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.