இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூட்டநெரிசலை குறைப்பதற்காக தென்மேற்கு ரயில்வே சார்பில் பெங்களூரில் (பானஸ்வாடி) இருந்து சம்பல்பூருக்கு சிறப்பு கட்டணத்தில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

08301 சம்பல்பூர் - பெங்களூரு(பானஸ்வாடி) சிறப்பு வாராந்திர விரைவு ரயில்

அக். 2-ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் காலை 9.35 மணிக்கு சம்பல்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூரு (பானஸ்வாடி) ரயில் நிலையம் வந்தடைகிறது. இதன் கடைசி சேவை டிச. 25-ஆம் தேதி சம்பல்பூரில் இருந்து புறப்படும்.

08302 பெங்களூரு - (பானஸ்வாடி)- சம்பல்பூர் சிறப்பு வாராந்திர விரைவு ரயில்

அக். 3-ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 6.15 மணிக்கு சம்பல்பூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இதன் கடைசி சேவை டிச. 26-ஆம் தேதி பெங்களூரில்(பானஸ்வாடி) இருந்து புறப்படுகிறது.

இந்த ரயில் இருமார்க்கத்திலும் கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், பகாலா, திருப்பதி, ரேனிகுன்டா, குடூர், நெல்லூர், ஒங்கால், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட்,விசாகப்பட்டணம், விஜியநகரம், பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, கேசிங்கா,திட்லாகர்க், போலங்கீர், பர்கர்க்ரோடு ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

ரயிலில் ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 10 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொதுவகுப்பு 4 பெட்டிகள் உள்ளிட்ட 18 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.