பாலக்காடு - திருச்செந்துார் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வலியுறுத்தல்பாலக்காடு - திருச்செந்துார் ரயில், தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.பொள்ளாச்சியில், இச்சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் முருகன் தலைமை வகித்தார். கூட்டத்தில், வரும், 28ம் தேதி, திருச்செந்துார், குலசேகரபட்டணம் முத்தாரம்மன் கோவிலில், தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.எனவே, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலக்காடு - திருச்செந்துார் பயணிகள் ரயில், தொடர்ந்து திருச்செந்துார் வரை இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுத்தால், பக்தர்களுக்கு பயனாக இருக்கும். இது குறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு காமராஜர் பேரவை, பொள்ளாச்சி வாழ் நாடார் சங்கத்தினர் உள்பட, பலர் பங்கேற்றனர்.
செய்திகள் நன்றி