திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இடி மின்னல் தாக்கியதில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் பழுதடைந்தது. பச்சை சிக்னல் செயல்படவில்லை. இதனால் அதிவிரைவு ரெயில்கள் திண்டிவனத்திற்கு முன்பு பாஞ்சாலம் மற்றும் ஒலக்கூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். நெல்லை அதிவிரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல அனந்தபுரி, மன்னை, பாண்டியன், காரைக்கால், சேலம், உழவன், மங்களூர் , ராக் போர்ட் ஆகிய ரயில்கள் தொடர்ந்து காலதாமதமாக திண்டிவனம் ரயில் நிலையத்தை கடந்து சென்றன.