கர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து, ராமேஸ்வரம் வரை பாலக்காடு, பொள்ளாச்சி, மதுரை வழித்தடத்தில் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.இதற்கான நேர அட்டவணையை முதன்மை பயணிகள் போக்குவரத்து மேலாளர் பரிந்துரைத்துள்ளார். அதன்படி, வாரத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்தில் இரவு, 9:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:15 மணிக்கு மங்களூரை அடையும். எதிர்மார்க்கமாக, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மங்களூரில் மாலை, 4:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 9:30 மணிக்கு ராமேஸ்வரத்தை அடையும். மொத்தமுள்ள, 749 கி.மீ., தொலைவில், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி உள்ளிட்ட, 21 ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.ராமேஸ்வரம் - மங்களூரு இடையே, 15 மணி, 45 நிமிடத்திலும், மங்களூரு - ராமேஸ்வரம் இடையே 16 மணி 45 நிமிடத்திலும் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகள் நன்றி - தினமலர்