கடந்த 4ம் தேதி மக்களவை உறுப்பினர்களுடன் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை உறுப்பினர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். இதனை தொடர்ந்து அனைத்து ரயில்வே கோட்டங்களும் தங்களது கோரிக்கைகளை தென்னக ரயில்வேக்கு பரிந்துரை செய்தனர். இதில் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் என்ன கோரிக்கை வைக்கப்பட்டது என்ற விவரம் வெளிவரவில்லை. ஆனால் சேலம் கோட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட கோரிக்கைகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

அதன்படி சேலம் ரயில்வே கோட்டம் பரிந்துரை செய்த விவரம் பின்வருமாறு

1. கோவை - ராமேஸ்வரம் இரவு நேர தினசரி ரயில். (வழி பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை)
மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வந்த ரயிலை மீண்டும் அகல ரயில் பாதையில் இயக்கவுள்ளதாகவும், இந்த ரயில் ஆன்மிக தலங்களை இணைக்கும் என்றும் சேலம் கோட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் வரலாறு - 1930ம் ஆண்டு கோவையில் இருந்து தனுஷ்கோடிக்கு இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1964ம் ஆண்டு தனுஷ்கோடி தடம் புயலினால் சேதம் ஆனது, அதனை தொடர்ந்து அந்த ரயில் கோவை - ராமேஸ்வரம் என மாற்றியமைக்கப்பட்டு இயங்கி வந்தது. இந்த ரயில் அகல பாதையாக மாற்றும் பணிக்காக நிறுத்தப்பட்டது. ஆனால் அகல ரயில் பாதையாக மாற்றியமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் இந்த ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை.

2. கோவை - தூத்துக்குடி பகல் நேர விரைவு பயணிகள் ரயில். (வழி பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மணியாச்சி)

பயணிகளின் கோரிக்கை ஏற்று தென்மாவட்டங்களுக்கு செல்ல இந்த ரயில் இயக்கலாம் என சேலம் கோட்டம் பரிந்துரை செய்துள்ளது.
ரயிலின் வரலாறு - 1930ம் ஆண்டு கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் 1994ம் ஆண்டு கடைசியில் மதுரை - மணியாச்சி - நெல்லை தடம் அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக நிறுத்தப்பட்டது.

3. கோவை - பெங்களூரு இரவு நேர தினசரி ரயில். (திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர்)
நீண்ட நாட்களாக பெண்களுக்கு கோவையில் இருந்து ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது என்றும், மக்களவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததாகவும் சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.

4. மங்களூர் - கோவை இன்டெர்சிட்டி ரயில், மேட்டுப்பாளையம் வரை நீடித்தால்.
கோவை ரயில் நிலையத்தின் இட நெருக்கடியை குறைக்கவும், உதகை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த ரயில் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கலாம் என சேலம் கோட்டம் பரிந்துரை செய்துள்ளது.

5. கோவை - கவுகாத்தி அந்த்யோதயா வாராந்திர ரயில்.
கோவை, திருப்பூர், ஈரோடு நகரங்களில் இருந்து நாட்டின் வட கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் அதிகாலையில் செல்வதால் இந்த ரயில் சேலம் கோட்டம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுபல்வேறு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டியில் அதிகளவில் கூட்டம் உள்ளதால், பலர் தொங்கி கொண்டு பயணிக்கின்றனர். இதனால் பல விபத்துகள் நடந்துள்ளது. இதன் காரணமாக ரயிலில் உள்ள அவசர நிறுத்தம் சங்கிலியை பயணிகள் உபயோகின்றனர். இதனால் ரயில்கள் நேரத்தை தவறவிடுகிறது, இதனால் புதிய முன்பதில்லா ரயில் இயக்க வேண்டும் என சேலம் கோட்டம் பரிந்துரை செய்துள்ளது.

இதில் கோவை - ராமேஸ்வரம் ரயில் பாலக்காடு - ராமேஸ்வரம் ரயிலுக்கு பதிலாக வருவதாக சில செய்தி தாழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. தமிழக மக்கள் மற்ற மாநிலத்தின் ரயிலை இங்கே பறிக்கவில்லை. கோவை - ராமேஸ்வரம் இடையே 1930ம் ஆண்டு முதல் இயங்கி வந்த ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை விடுத்தனர். அதனை சேலம் கோட்டம் பரிந்துரை செய்துள்ளது. அதற்கான ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது.


கோவை - பொள்ளாச்சி தடத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இந்த தடத்தில் இன்னும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது. ஆனால் பாலக்காடு - பொள்ளாச்சி தடத்தில் மூன்று நிரந்தர ரயில்கள் இயங்கி வருகிறது. அதே சமயம் கோவை - பொள்ளாச்சி தடத்திற்கு பிறகு போக்குவரத்திற்கு வந்த செங்கோட்டை - கொல்லம் பாதையில் 3+3 தினசரி ரயில்களும், 1+1 வாராந்திர சிறப்பு ரயிலும் இயங்கி வருகிறது. இந்த செங்கோட்டை - கொல்லம் பாதை மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் கோவை - பொள்ளாச்சி தடம் மூன்று கோட்டங்களில் கட்டுப்பாட்டில் வருவதால் ரயில்கள் இயக்கத்தில் தொடர்ந்து சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. எனவே பாலக்காடு கோட்ட பகுதிகளில் இருக்கும் தடங்களை சேலம் அல்லது மதுரை கூட்டத்துடன் இணைக்க வேண்டும். மேலும் கோவை - பாலக்காடு தடத்தில் வாலையார் வரை சேலம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வண்ணம் மாற்ற வேண்டும்.


கோவை - மதுரை காலை நேர ரயில் : பயணிகள் எதிர்ப்பார்ப்பு

பொள்ளாச்சி நேரம்

பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் - 5:57/6:00 காலை
திருவனந்தபுரம் - மதுரை அம்ரிதா ரயில் - 7:20/7:25 காலை


பாலக்காட்டில் இருந்து காலை வேளையில் மதுரை நோக்கி இரண்டு ரயில்கள் செல்கிறதுஇதன் காரணமாக கோவையில் இருந்து மதுரைக்கு காலை நேரத்தில் ரயில்கள் கேட்டால் பொள்ளாச்சியில் இருந்து இரண்டு ரயில்கள் செல்கிறது என்று ரயில்வே அதிகாரிகள் கூறிகின்றனர்தற்போது அம்ரிதா ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுஎனவே பாலக்காடு திருச்செந்தூர் பயணிகள் ரயிலை கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக இயக்க வேண்டும்அல்லது அம்ரிதா ரயிலை பழனியுடன் நிறுத்தி விட்டுகோவையில் இருந்து மதுரைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துதற்போது பாலக்காடு - ராமேஸ்வரம் ரயில் கோவை - ராமேஸ்வரம் ரயிலாக இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ள இந்த செய்தி கேரளா ரயில் ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோவை - ராமேஸ்வரம் இடையே இயங்கி வந்த ரயிலை கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பகுதி மக்கள் மற்றும் ரயில் ஆர்வலர்கள் இயக்க பலமுறை கோரிக்கை விடுத்தது வந்தனர். மேலும் தற்போது மக்களவை உறுப்பினர்கள் சுறுசுறுப்பாக இந்த கோரிக்கைகளை ஏற்று அதனை ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்கின்றனர். இதன் காரணமாக இயங்கி வந்த கோவை - ராமேஸ்வரம் ரயில் மீண்டும் இயக்க ஸலாம் கோட்டம் பரிந்துரை செய்துள்ளது.
ரயில்வே அதிகாரிகள் கூறுவது.

இது தொடர்பாக சேலம் கோட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, "அவ்வாறு பரிந்துரை செய்யவில்லை என்றும். கோவை - ராமேஸ்வரம் இடையே இயங்கிய ரயிலை மீண்டும் இயக்கவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்றும் கூறினார்.

மேலும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்துள்ள செய்தி அடிப்படையில்தி நியூஸ் மினிட்தமிழ் சமயம் மற்றும் கோவை சிம்ப்ளி சிட்டி பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் கோட்டம் அனுப்பிய பரிந்துரை, இதில் பாலக்காடு - ராமேஸ்வரம் என்று குறிப்பிடவில்லை


மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறப்படுவது !

கோவை - ராமேஸ்வரம் இடையே 1930ம் ஆண்டு முதல் ரயில் சேவை இருந்து வருகிறது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த ரயிலை தடுக்க சிலர் முயல்கிறார்கள். இதன் காரணமாக தவறான செய்திகள் உலா வருகின்றன.