செங்கோட்டையிலிருந்து பகல் 11:50 மணிக்கு புறப்பட்டு ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் வழியாக மதுரை வரை இயங்கும் 56734 மதுரை பயணிகள் ரயில், செப்.21, 22, 23, 24 தேதிகளில் விருதுநகர் வரை மட்டுமே செல்லும்.

மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 5மணிக்கு புறப்பட்ட வேண்டிய 56735 செங்கோட்டை பயணிகள் ரயில் மாலை 6:05க்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டு வழக்கம்போல் செங்கோட்டை சென்றடையும். மதுரை - விருதுநகர் இடையே ரத்து.

பராமரிப்பு பணிகள் காரணமாக விருதுநகர் மற்றும் மதுரை இடையே இந்த ஒரு ரயிலின் இயக்கம் மட்டும் ரத்து செய்யபட்டுள்ளது. மற்ற ரயில்கள் வழக்கம்போல் மதுரை-செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் என மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.