கோயம்புத்தூர்- மதுரை ரயில் சேவை: அதிகரிக்க ரயில்வே முடிவு - மதுரை நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்


கோயம்புத்தூர்-பொள்ளாச்சி-உடுமலைபேட்டை- மதுரை மீட்டர் அகல இருப்பு பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் நடவடிக்கையால் இத்தடத்தில் ஓடிய ரயில்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. கோயம்புத்தூர் – திருப்பூர் – ஈரோடு – கரூர் – திண்டுக்கல் – மதுரை என்ற இந்த ரயில் தடத்தில் மூலம் மட்டுமே கோயம்பத்தூரில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டிய சூழ் நிலை இருந்தது.


2015 -ல் இந்த அகல ரயில்பாதை திட்டம் முடிவடைந்தும் இன்னும் பழைய ரயில் சேவைகளை தொடங்காமலே தென்னக ரயில்வே இருந்து வந்ததால், மதுரை நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நாட்களுக்கு முன்பு திருச்சி ரயில்வே பிரிவு உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மீண்டும் ரயில் சேவைகளைத் தொடங்கும் சாதியக் கூறுகளை பற்றி விவரித்திருக்கிறார்.


இந்நிலையில், ராமேஸ்வரம்-மதுரை-கோயம்புத்தூர் ரயில்வே சேவையை மீண்டும் தொடங்க விருக்கிறோம் என்று தென்னக ரயில்வேயில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன. மேலும், வஞ்சி மணியாச்சி, மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, போத்தனுர் மற்றும் கோவை பயணிகள் ரயில் சேவைகளையும் மீண்டும் தொடக்க விருக்கிறது தென்னக ரயில்வே. அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்னும் மூன்று மாதத்தில் வெளியடப்படும் என்று தெரிகிறது .