ரயிலில் குளிர்சாதன இயந்திரம் பழுது - மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டம்கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயிலில் குளிர்சாதன இயந்திர பழுதை சரிசெய்யக்கோரி, மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் வெள்ளிக்கிழமை இரவு சில நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மதுரை ரயில் நிலையம் வந்தடைந்ததுஅப்போது அந்த ரயிலில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் பயணித்த பயணிகள் சிலர், குளிர்சாதன இயந்திரம் இயங்கவில்லை என ரயில்வே நடைமேடையில் இறங்கி போராட்டம் நடத்தினர்

மேலும் ரயில் கிளம்பும் போதே இந்த பிரச்னை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த ரெயில்வே ஊழியர்கள் குளிர்சாதன இயந்திரத்தின் பழுதை சரிசெய்தனர். இதைடுத்து மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் புறப்பட்டு சென்றது.


புதியது பழையவை