பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால், மதுரை ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 7.45 மணிக்கு புறப்படும் வண்டி எண்- 56624 மதுரை - பழனி பயணிகள் ரயில், செப்டம்பர் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
அதே சமயம், பயணிகளின் நலன் கருதி, மதுரை ரயில் நிலையத்திலிருந்து செப்டம்பர் 30ம் தேதி வரை காலை 6.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், காலை 10 மணிக்கு பழனி ரயில் நிலையம் வந்து சேரும்.
மேற்கொண்ட தகவலை மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.