கோட்டை, பூங்கா ரயில் நிலையம் உட்பட, ஐந்து நிலையங்களில், 1.32 கோடி ரூபாய் செலவில், பயணியருக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில் பயணியர் கூட்டம் அதிகம் உள்ளதால், நிலையங்களில் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.ஏற்பாடுமாம்பலம், கோடம்பாக்கம், கிண்டி, திரிசூலம் நிலையங்கள் உட்பட, பல நிலையங்களில், இயந்திரவசதியில், குளிர்ந்த குடிநீர் வழங்கப்படுகிறது. அனைத்து ரயில் நிலையங்களிலும், பயணியருக்கு தேவையான குடிநீர் வழங்க, ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. சில நிலையங்களில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்தும், சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து, லாரிகளில் தண்ணீர் வாங்கியும், பயணியருக்கு பயன்படுத்தப்படுகிறது.மின்சார ரயில்களில், பயணியர் வருகை அதிகரித்துள்ளதால், நிலையங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், கடற்கரை, பூங்கா, கோட்டை, பேசின் பாலம் மற்றும் சென்ட்ரல்மூர்மார்க்கெட் ரயில் நிலையங்களில், 1.32 கோடி ரூபாய் செலவில், குடிநீர் லாரிகளில் தண்ணீர் பெற்று, நிலையங்களில், பயணியருக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் சிக்கனம் நிலையங்களில் குடிநீர் வசதி குறித்து, திட்டப்பணிகள் பிரிவு அதிகாரி கூறியதாவது:புறநகர் மின்சார ரயில் நிலையங்களில், பயணியரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பல்லாவரம், திரிசூலம், கிண்டி, கோடம்பாக்கம், எழும்பூர் மற்றும் பூங்கா நகர் நிலையங்களில், பயணியர்குடிநீரை குடிப்பதற்கு மட்டுமின்றி, சாப்பாட்டு, 'டப்பா'க்கள், கேரியர்கள் கழுவுவதற்கும் பயன்படுத்துவதால், தண்ணீர் அதிகமாக வீணாகிறது. தண்ணீருக்கான செலவும் அதிகமாகிறது. அனைத்து பயணியரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
செய்திகள் நன்றி - தினமலர்