5 நிமிடங்களில் காலியான பொங்கல் ரயில் டிக்கெட்கள் - கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா ?

Image result for pongal train ticket booking 2020


பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.,12) துவங்கியது. அதன்படி ஜன.,11 ம் தேதி செல்வோர் நாளையும் (செப்.,13), ஜன.,12 ம் தேதி செல்வோர் செப்.,14ம் தேதியும் முன்பதிவு செய்யலாம். மேலும் ஜன.,13 ம் தேதி ஊருக்கு செல்வோர் செப்.,15 ம் தேதி முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.,17ம் தேதி துவங்க உள்ளது.

இதனிடையே ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு துவங்கிய நிலையில், சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சிக்கு செல்வதற்கான ரயில்களின் டிக்கெட்கள் மட்டும் முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களுக்குள் காலியாகி விட்டன. இதனால் முன்பதிவு செய்ய காத்திருந்த மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆண்டுதோறும் இதே போன்ற பிரச்னை ஏற்பட்டு வருவதால், சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா ? பயணிகளின் எதிர்பார்ப்பு

  • சென்னை எழும்பூர் - காரைக்குடி வழி விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை
  • சென்னை எழும்பூர் - காரைக்கால் வழி விழுப்புரம், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம்
  • சென்னை எழும்பூர் - நெல்லை வழி விழுப்புரம், திருச்சி, காரைக்குடி, அருப்புக்கோட்டை
  • சென்னை சென்ட்ரல் - எழும்பூர் வழி சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை
  • சென்னை சென்ட்ரல் - பழனி வழி சேலம், கோவை, பொள்ளாச்சி
  • சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் வழி சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில்


மேற்கொண்ட தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கினால் தமிழகத்தின் பல பகுதி மக்கள் பயனடைவார்கள்..
புதியது பழையவை