மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயிலின் பெட்டிகள் பழுதுகளை சீரமைத்து புதுப்பொலிவு பெறு, 'டிரெய்லர்' மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


 திருச்சிக்கு செல்லும் ஊட்டி ரயில் பெட்டி
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும், மலை ரயிலில் ஒரு இன்ஜின், நான்கு பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டிகளை இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, பழுதுகளை நீக்கி சீரமைக்க, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 28 சீட்டுகள் கொண்ட கார்டு பெட்டியை பழுது நீக்க திருச்சி அனுப்பி வைத்தனர். அப்பெட்டி சீரமைத்தவுடன், ராட்சத டிரெய்லர் மூலம், திருச்சியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு நேற்று காலை கொண்டு வந்தனர். மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில்இரண்டு கிரேன் மூலம், டிரெய்லரிலிருந்த பெட்டியை, தண்டவாளத்தில் இறக்கி வைத்தனர். ரயில் நிலையத்தில் இருந்த, 57 சீட்டுகள் கொண்ட மலை ரயில் பெட்டியில் உள்ள, பழுதுகளை நீக்க திருச்சிக்கு கொண்டு செல்ல, கிரேன்கள் மூலம் டிரெய்லரில் ஏற்றினர். கோச் பொறியாளர் முகமது அசரப் தலைமையில், ரயில் ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.

புதியது பழையவை