செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பகுதி தூரம் மட்டுமே ரயில்கள்

சென்னை கடற்கரையில் இருந்து இன்று(செப் 13), நாளை(செப் 14) மற்றும் 17, 20, 21, 24, 27, 28 மற்றும் அக்டோபர் 1, 4, 5, 8, 11, 12, 15, 18, 19 ஆகிய நாட்களில் காலை 9:32, 10:08, 10:56 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் (40523, 40525, 40527) சிங்கபெருமாள்கோவில் வரை மட்டும் இயக்கப்படும்.


செங்கல்பட்டில் இருந்து இன்று(செப் 13), நாளை(செப் 14) மற்றும் 17, 20, 21, 24, 27, 28 மற்றும் அக்டோபர் 1, 4, 5, 8, 11, 12, 15, 18, 19 ஆகிய நாட்களில் காலை 11.30, 12.20 மணிக்கும், திருமால்பூரில் காலை 10.40க்கும் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் (40532, 40534, 40804) பகுதி தூரம் மட்டுமே செல்லும். அதாவது சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 9:30, 10:20, 11மணிக்கு செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில்கள் கடற்கரை - சிங்கபெருமாள்கோவில் இடையே மட்டும் இயங்கும்.

முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

  • செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில் (40536) இன்று(செப் 13) முதல் அக்டோபர் 19ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
  • செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு சென்னை கடற்கரை புறப்படும் (40632) ரயில் செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
  • திருமால்பூர் - சென்னை கடற்கரை வரை காலை 11.35 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் இன்று(செப் 13) முதல் அக்டோபர் 19ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.


மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை