திருநெல்வேலி - சென்னை எழும்பூர்/ தாம்பரம் - திருநெல்வேலி இடையே கோவில்பட்டி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக பல்வேறு சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


82601 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்.

சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 4, 25 மற்றும் நவம்பர் 1, 8ம் தேதிகளில் மாலை 6:50க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சதுர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

82602 திருநெல்வேலி - தாம்பரம் இடையே சுவிதா சிறப்பு ரயில்.திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 7, 28 மற்றும் நவம்பர் 3, 10ம் தேதிகளில் மாலை 6:15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06001 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்.

சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 11, 18 மற்றும் நவம்பர் 15, 29ம் தேதிகளில் மாலை 6:50க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சதுர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06002 திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்.

திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 20, நவம்பர் 17, 24, மற்றும் டிசம்பர் 1ம் தேதிகளில் மாலை 3மணி கு புறப்பட்டு மறுநாள் காலை 2:15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


புதியது பழையவை