தமிழக மக்களவை உறுப்பினர்களுடன் தெற்கு ரயில்வே தலைமை அதிகாரிகள் ஆலோசனை


திருச்சி, மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட தமிழக மக்களவை உறுப்பினர்களுடனான தெற்கு ரயில்வே தலைமை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று(செப் 4) நடைபெற்று வருகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தக்கூட்டம், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் தலைமையில் திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது.

இதில் மக்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, மயிலாடுதுறை ராமலிங்கம், நாகை செல்வராஜ், தேனி ரவீந்திரநாத் குமார், கேரள மாநிலத்தின் கொடிக்குனில் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தங்கள் பகுதிக்காக மக்களவை உறுப்பினர்கள் எடுத்துரைக்கும் கோரிக்கைகளுக்கு ரயில்வே அதிகாரிகள் பதிலளிப்பார்கள்.

அதே வேளையில் கடந்த ஆண்டுகளில் அதே பகுதியில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கான பதில்கள் குறித்தும் விவாதிக்கப்படும். மக்களின் எதிர்பார்ப்புகள், அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களின் நிலை குறித்தும் இங்கு ஆலோசிக்கப்படும்.

மேலும் மக்களவை உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதனிடையே இந்த ஆலோசனை கூட்டத்தில், சிதம்பரம் தொகுதி எம்.பி.திருமாவளவன், சிவகங்கை தொகுதி எம்.பி.கார்த்தி சிதம்பரம் கலந்து கொள்ளததால் அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
புதியது பழையவை