மதுரை கோட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ரயில்  நிலையத்திலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் - 56624 மதுரை - பழனி பயணிகள் ரயில், செப்டம்பர் 12ம் தேதி முதல் செப் 20ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
அதே சமயம் மேற்கொண்ட தேதிகளில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு காலை 10 மணிக்கு பழனி சென்றடையும்.

திருச்சியில் இருந்து காலை 10:05க்கு புறப்படும், 76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில், செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ரத்து.

மானாமதுரையில் இருந்து மதியம் 2மணிக்கு புறப்படும், 76808 மானாமதுரை - திருச்சி பயணிகள் ரயில், செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ரத்து.காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 76840 காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில் செப்டம்பர் 14ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 56737 செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயில், புனலூர் மற்றும் கொல்லம் இடையே செப்டம்பர் 15ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து காலை 7:10க்கு புறப்படும், 56319 நாகர்கோவில் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில், செப்டம்பர் 8ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை விருதுநகர் - திண்டுக்கல் இடையே ரத்து. (வியாழக்கிழமை தவிர)

கோயம்பத்தூரில் இருந்து காலை 7:20க்கு புறப்படும், 56320 கோயம்பத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில், செப்டம்பர் 8ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை திண்டுக்கல் - விருதுநகர் இடையே ரத்து. (வியாழக்கிழமை தவிர)

செங்கோட்டையில் இருந்து பகல் 11:50க்கு புறப்படும், 56734 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில், செப்டம்பர் 9, 10, 13, 14, மற்றும் 15ம் தேதிகளில் விருதுநகர் - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

மதுரையில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும், 56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில், செப்டம்பர் 9, 10, 13, 14, 15ம் தேதிகளில் மதுரை - விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையில் இருந்து பகல் 11:50க்கு புறப்படும், 56734 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில், செப்டம்பர் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் சிவகாசி - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

மதுரையில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும், 56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில், செப்டம்பர் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் மதுரை - சிவகாசி இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காட்டில் இருந்து காலை 4:10க்கு புறப்படும், 56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில், செப்டம்பர் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை திண்டுக்கல் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. (செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர)

திருச்செந்தூரில் இருந்து பகல் 11:40க்கு புறப்படும், 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில், செப்டம்பர் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை திருநெல்வேலி - திண்டுக்கல் இடையே ரத்து. (செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர)

பாலக்காட்டில் இருந்து காலை 4:10க்கு புறப்படும், 56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில், செப்டம்பர் 13, 17 மற்றும் 20ம் தேதிகளில் மதுரை - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூரில் இருந்து பகல் 11:40க்கு புறப்படும், 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில், செப்டம்பர் 13, 17 மற்றும் 20ம் தேதிகளில் திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து.

திருச்சியில் இருந்து காலை 6:40க்கு புறப்படும், 56829 திருச்சி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில், செப்டம்பர் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே ரத்துய் செய்யப்படுகிறது (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர).

ராமேஸ்வரத்தில் இருந்து பகல் 1:55க்கு புறப்படும், 56830 ராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் ரயில், செப்டம்பர் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை ராமேஸ்வரம் - மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது  (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர).

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11:10க்கு புறப்படும் 56822 திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், செப்டம்பர் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை 35 நிமிடங்கள் தாமதமாக பகல் 11:45க்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர).

புனலூர் ரயில் நிலையத்திலிருந்து செப்டம்பர் 15ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 56701 புனலூர் - மதுரை பயணிகள் ரயில், மாலை 5.45 மணிக்கு புறப்படும். 2மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதம்.

காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 76840 காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில்,  செப்டம்பர் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை காலை 10.30 மணிக்கு புறப்படும்.

திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில், செப்டம்பர் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை காலை 10.30 மணிக்கு புறப்படும்.

மானாமதுரை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 76808 மானாமதுரை - திருச்சி பயணிகள் ரயில், செப்டம்பர் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை மதியம் 2.15 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 56826 திருநெல்வேலி - திண்டுக்கல் - ஈரோடு பயணிகள் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 115 நிமிடங்கள் காலதாமதமாகச் சென்றடையும் (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர).

வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில், திருவனந்தபுரம் கோட்டத்துக்கு செப்டம்பர் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை 105 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும் (வியாழக்கிழமைகள் தவிர).

வண்டி எண் 16129 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இணைப்பு ரயில், செப்டம்பர் 8ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு இரவு 10.05 மணிக்கு சென்றடையும். அதாவது, 95 நிமிடங்கள் காலதாமதமாகச் சென்றடையும் (வியாழக்கிழமைகள் தவிர).

வண்டி எண் 18495 ராமேசுவரம் - புவனேஸ்வர் விரைவு ரயில், திருச்சி கோட்டத்துக்கு செப்டம்பர் 8ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் 40 நிமிடங்கள் காலதாமதமாகச் சென்றடையும்.

வண்டி எண் 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கு செப்டம்பர் 11ம் தேதி வரை 35 நிமிடங்கள் காலதாமதமாகச் சென்றடையும்.

மேற்கொண்ட தகவலை மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை