ரயில்வே துறையின் அவசர எண்ணுக்கு அழைத்து பீட்சா கேட்கும் பொதுமக்கள் !


ரயில் பயணத்தின் போது ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டாலோ அல்லது அவசர உதவிக்கோ பொதுமக்கள் காவல்துறையினரை தொடர்பு கொண்டு உதவி கேட்பதற்காக 1512 என்ற அவசர எண்ணை அறிவித்துள்ளனர்.


ஆனால் அந்த அவசர எண்ணை தொடர்புகொள்ளும் பொதுமக்கள்பீட்சா வேண்டும்செல்போன் ரீசார்ஜ் செய்ய வேண்டும் போன்ற தேவைகளை கேட்பதாக ரயில்வே காவல்துறையினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்நாள் ஒன்றுக்கு சராசரியாக 200க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும்அதில் 80 சதவீதத்தினர் பீட்சா போன்ற உணவுகள் கேட்டும்செல்போன் ரீசார்ஜ் செய்யக்கோரியும் உதவிகள் கேட்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அவசர எண்ணுக்கு அழைக்கும் பலர் எனக்கு பர்கர் வேண்டும்டீ வேண்டும்ஜூஸ் வேண்டும்தண்ணீர் வேண்டுமென கேட்கிறார்கள்சிலர் செல்போன் ரீசார்ச் செய்ய வேண்டுமென கேட்கிறார்கள்பொதுமக்களுக்கு அவசர எண் தொடர்பான விழிப்புணர்வு இல்லை. 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து வருகின்றனர்ஆனால் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போலீசாருக்கு தொல்லையாக உள்ளதுசிலர் ரயில் நிலையம் வர காலதாமதம் ஆகிறது என்பதால் ரயிலை நிறுத்துங்கள் என்றுக்கூட அவசர எண்ணுக்கு அழைத்துச் சொல்கின்றனர்'' என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை