சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் இடையே அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 8ம் தேதிகளில் சுவிதா சிறப்பு ரயில்.


82631 சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 8ம் தேதி இரவு 8:10க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:45க்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் தமிழகத்தில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

82632 எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சுவிதா சிறப்பு ரயில்.

எர்ணாகுளத்தில் இருந்து அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 10ம் தேதி இரவு 7மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:20க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இந்த ரயில் தமிழகத்தில் கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.