டிசம்பர் முதல் சத்தமில்லா ரயில்கள் - இந்திய ரயில்வே திட்டம்


வரும் டிசம்பர் மாதம் முதல் சத்தமில்லாமல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ரயிலிலும் 2 பெட்டிகளில் ஜெனரேட்டர்களை பொருத்தவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மேலும் ரயில்களில் கூடுதல் இருக்கை வசதிகளையும், அவற்றில் சில இருக்கைகளை மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்களில் பொருத்தப்படும் ஜெனரேட்டர்கள் மூலம் மின் சப்ளை பெற்று, சத்தமில்லாத வகையில் ரயில்களை இயக்கவும், சத்தம் ஏற்படுத்தும் இயந்திரங்களுக்கு விடை கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சத்தமில்லாத இரண்டு ஜெனரேட்டர்களில் ஒன்று வழக்கமான பயணத்திற்கும், மற்றொன்று அவசர காலத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு ஜெனரேட்டர் சரக்குகள் ஏற்றும் பெட்டிக்கு பின்புறமும், மற்றொன்று காவலர்களுக்கான பெட்டிக்கு பின்புறமும் பொருத்தப்பட உள்ளது.
அத்துடன் மாற்று திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பெட்டியில் 31 கூடுதல் இருக்கைகள் சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களுக்காக அமைக்கப்பட உள்ளது. தற்போதுள்ள ரயில்களில் 105 டெசிபெல் சத்தம் வெளியிடப்படுகிறது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


புதியது பழையவை