மொரப்பூர் - தர்மபுரி ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க தர்மபுரி எம்.பி., கோரிக்கை


மொரப்பூர் - தர்மபுரி ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தர்மபுரி ரயில்வே பிளாட்பாரம், 1ல் பயணிகள் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், சென்னை - திருவனந்தபுரம் எக்பிரஸ் ரயிலை, மொரப்பூரில் நின்று செல்லவும், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் தற்காலிகமாக நின்று செல்லும், ஜெயந்தி - ஜனதா எக்ஸ்பிரசை நிரந்தரமாக, நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொம்மிடியிலிருந்து, மங்களூரு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் காய்கறிகள் எடுத்து செல்ல, பார்சல் புக்கிங் தொடங்க வேண்டும். ஜோலார்பேட்டை- அரக்கோணம், ஜோலார்பேட்டை - சென்னை ரயில்களை, சேலம் வரை நீட்டிக்க வேண்டும். தென்மேற்கு ரயில்வே மண்டலத்தை சேர்ந்த தர்மபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணி, மேம்பால திட்ட பணிகள், தர்மபுரி - பெங்களூருக்கு புதிய ரயில் சேவை துவங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

புதியது பழையவை