மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே பாதைக்கு ரூ.358 கோடி நிதி ஒதிக்கீடு - மத்திய அமைச்சர் தகவல்


மொரப்பூர் - தர்மபுரி இடையே மீண்டும் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களவை உறுப்பினர் எஸ்.செந்தில்குமாருக்கு மத்திய அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில்,

தர்மபுரி - மொரப்பூர் அகல ரயில் பாதை திட்டம் கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டதாகவும், இதற்காக 2019ம் ஆண்டு ரூ.358.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மொத்தமுள்ள 36 கிலோமீட்டர் தடத்தில், தர்மபுரி அருகே சுமார் 8 கிலோமீட்டர் தடத்திற்கு நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் என்றும், இதற்காக 91.39 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் மாநில அரசு நிலம் கையகப்படுத்தி நிலம் வழங்கினால் பணிகள் துவக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.