கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக செப் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.

நேரம் மற்றயமைக்கப்படும் ரயில்

கோவையில் இருந்து மாலை 4:30க்கு புறப்பட வேண்டிய, 56605 கோயம்பத்தூர் - திருச்சூர் பயணிகள் ரயில், செப்டம்பர் 19ம் தேதி கோவையில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

பகுதி தூரம் மட்டுமே செல்லும் ரயில்கள்.




கோவைக்கு பிற்பகல் 2மணிக்கு வந்து சேர வேண்டிய, 56650 கண்ணூர் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில், செப்டம்பர் 19ம் தேதி போத்தனுர் - கோயம்பத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

கோவையில் இருந்து பிற்பகல் 2:15க்கு புறப்படும், 56651 கோயம்பத்தூர் - கண்ணூர் பயணிகள் ரயில், செப்டம்பர் 19ம் தேதி கோயம்பத்தூர் - போத்தனுர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் போத்தனுர் - கண்ணூர் இடையே மட்டும் இயங்கும்.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

கோவையில் இருந்து முற்பகல் 11:50க்கு புறப்படும், 56148 கோயம்பத்தூர் - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில், செப்டம்பர் 20, 21, 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1மணிக்கு புறப்படும், 56149 மேட்டுப்பாளையம் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில், செப்டம்பர் 20, 21, 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மேற்கொண்ட தகவல்களை சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.