ரயில் மூலம் கல்லூரி சென்று மேற்படிப்புகளை தொடரும் மாணவர்கள், ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சென்னை ரயில்வே போலீசார் அறிவுரை வழங்கினர்.

சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில், காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஜெயா கலைக்கல்லூரி, ஈராம் கலைக்கல்லூரி, தியாகராய கல்லூரி உள்ளிட்ட சுமார் 6 கல்லூரிகளை சேர்ந்த 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில் உரையாற்றிய  காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாணவர்கள் ஆபத்தான முறையில் ரயில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
குறிப்பாக படியில் நின்றபடி பயணிப்பது, பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, கூச்சலிட்டு சக பயணிகளுக்கு தொந்தரவு அளிப்பது, பட்டாக்கத்திகளை வைத்துக்கொண்டு அச்சுறுத்தல் விடுப்பது, அசம்பாவிதத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தினார்.
மேலும் கல்லூரி பருவம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை சீரழிக்காமல்,பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தும்படி அறிவுரை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேஸ்வரன், மாணவர்கள் அசம்பாவித செயல்களில் ஈடுபட்டால் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டும் என எச்சரித்ததாக கூறினார்.


புதியது பழையவை