மானாமதுரை ரயில் நிலையத்தில் ஏற்கனவே இருந்த பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட்டு மைதானத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மானாமதுரை ரயில்வே ஜங்ஷனில் இருந்து மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், விருதுநகர் ஆகிய மார்க்கங்களின் வழியாக தினந்தோறும் 26க்கும் மேற்பட்டரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து மதுரை, காரைக்குடி, திருச்சி- ராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு தினந்தோறும் ஏராளமான அரசு ஊழியர்களும், மாணவர்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஜங்ஷன் வளாகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட்டு மைதானம் இருந்தது, இதில் பயணிகள் ரயில் வரும் வரை தங்களது குழந்தைகளோடு பொழுதை கழித்து வந்தனர். தற்போது அந்த இடம் பராமரிப்பில்லாமல் கருவேலமரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.
இந்த பகுதியில் இரவு நேரங்களில் இருட்டாக இருப்பதினால் பயணிகள் நடந்து செல்ல மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.ரயில் பயணிகள் கூறியதாவது: முன்பு ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட்டு மைதானம் இருந்ததால் ரயில் வரும் வரை பயணிகள் தங்களது குழந்தைகளோடு அமர்ந்து பொழுதை கழித்து வந்தனர், தற்போது அந்த இடம் பராமரிப்பில்லாமல் இருப்பதால் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.ரயில்வே நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதியது பழையவை