சேலம் ரயில்வே கோட்டத்தில், பார்சல் மூலம், ஏப்., முதல், ஆகஸ்ட் வரை, 6.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில், பார்சல் சேவைக்கு கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக எக்ஸ்பிரஸ், பயணியர் ரயில்கள் மூலம், பல்வேறு இடங்களுக்கு, 'புக்கிங்' செய்யப்படுகிறது. வழக்கமான ரயில்களில், 23 டன் வரை கையாளப்படுகிறது. 468 டன் எடைக்கு அதிகமாக, 'புக்' செய்யும்போது, தனிப்பட்ட சரக்கு ரயில் மூலம் சேவை வழங்கப்படுகிறது. இந்த வகையில், சேலம் கோட்டத்தில், ஏப்., முதல் ஆக., வரை, 6.95 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

பார்சல் சேவை தொடர்பான விபரங்களுக்கு, சேலம், 0427-2448163, திருப்பூர், 95431-52339, ஈரோடு, 0424-2284988, கரூர், 89031-19832, கோவை, 80155-72448, மேட்டுப்பாளையம், 87544-16967 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News Courtesy - Dinamalar