ஜம்முவில்
இருந்து கன்னியாகுமரிக்கு,
'ஹிம்சாகர்'
விரைவு
ரயில் வாரத்தில் ஒருமுறை
இயக்கப்படுகிறது.
அதன்படி
கடந்த,
17ம்
தேதி ஜம்முவில் புறப்பட்டது.
இந்த
ரயிலில் ஆக்ராவில் இருந்து
ஈரோட்டுக்கு,
தனியார்
நிறுவனம் சார்பில்,
எல்.இ.டி.,
- டி,வி.க்கள்,
'குளிர்சாதன'
இயந்திரம்,
வீட்டு
உபயோக பொருட்கள்,
பிரிட்ஜ்,
லேப்டாப்
உள்ளிட்டவை பார்சல் பெட்டியில்
ஏற்றினர்.
நேற்று
காலை,
ஈரோட்டை
ரயில் அடைந்தது.
பார்சல்
பொருட்கள் ஏற்றி வரும் பெட்டியை,
ரயில்வே
பார்சல் ஊழியர் திறந்து
விட்டார்.
சுமை
தூக்கும் தொழிலாளர்கள் உள்ளே
சென்று,
பெட்டிகளை
எடுத்தபோது,
காலி
அட்டை பெட்டிகள் மட்டுமே
இருந்தன.
எலக்ட்ரானிக்
பொருட்கள்,
வீட்டு
உபயோக பொருட்கள் இல்லை.
திருட்டு
போன பொருட்களின் மதிப்பு,
?? லட்சம்
ரூபாய் இருக்குமென தெரிகிறது.
இதனை
தொடர்ந்து ஈரோடு ரயில்வே
போலீசார்,
ரயில்வே
பாதுகாப்பு படையினர்,
காலி
அட்டை பெட்டிகளை ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே
இதேரயிலில் சில மாதங்களுக்கு
முன்,
பார்சலில்
அனுப்பிய பொருட்கள்,
ஈரோடு
வந்து சேரவில்லை என புகார்
எழுந்தது.
இந்நிலையில்
மீண்டும் பொருட்கள் திருட்டு
போனது,
அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.