பண்டேரிபுரம், ஷீரடி, மந்த்ராலயம் ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.


.ஆர்.சி.டி.சி. கடந்த 2005ம் ஆண்டில் இருந்து பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு பாரத தரிசன சுற்றுலா என்ற பெயரில் வரும் அக்டோபரில் மதுரையில் இருந்து சென்னை வழியாக ஷீரடி, மந்த்ராலயத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில் அக்டோபர் 5ம் தேதி இயக்கப்பட உள்ளது.

மதுரையில் இருந்து அக்டோபர் 5ம் தேதி புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக பண்டேரிபுரம், ஷீரடி, மந்த்ராலயத்துக்கு செல்கிறது.

இதில் பயணிப்பவர்களுக்கு தென் இந்திய சைவ உணவு வழங்கப்படும். இதற்காக இந்த ரயிலில் உணவு சமைக்க தனி பெட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டணம் : 6 நாள்களுக்கு பயணக்கட்டணம் நபருக்கு ரூ.5,670.

மேலும் விவரங்களுக்கு 9003140680, 9003140681 என்ற அலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.