விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி ரயில் பிரிவில், சாத்தூர் - நல்லி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வண்டி எண் 56769 / 56770 திருச்செந்தூர் - பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் 18.09.2019 முதல் 30.09.2019 வரை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர திண்டுக்கல் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மேற்கொண்ட தேதிகளில் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் மதுரை - திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.