குழந்தை மற்றும் மனித கடத்தல் தடுப்பு தொடர்பாக ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம், சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழக ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி பிரேந்தர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்குழந்தைகள் மீட்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மீட்கப்படும் குழந்தைகளில் பெரும்பாலானோர், வீடுகளை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறுவோர், வேலைக்கு அழைத்து வரப்படுவோராகவே இருப்பதாகத் தெரிவித்தார்.