Image result for chennai suburban train


சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை (செப் 29ம் தேதி) காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம் பின்வருமாறு


சென்னை கடற்கரை - தாம்பரம் - சென்னை கடற்கரை

சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு காலை 10.30, 10.40, 10.50,11.10,11.20, 11.30,11.40, மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், அதேபோல் தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு காலை 10.45, 10.55,11.15, 11.25, 11.35, மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, மாலை 3, 3.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை

சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 11, 11.50, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45, அரக்கோணத்துக்கு மதியம் 12.50 மணி மின்சார ரயிலும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1, 1.50, திருமால்பூர் - கடற்கரைக்கு காலை 10.40, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு இரவு 7.15 மணி என மொத்தம் 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப் படுகின்றன.

இதற்கிடைய, பயணிகள் வசதிக்காக மேற்கண்ட நாளில் செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1, 1.50 மணிக்கும், காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு காலை 9.15, திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.



சென்னை - வேளச்சேரி தடத்தில் செப் 29ம் தேதி காலை 7:50 முதல் பிற்பகல் 2மணி வரை அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து.