எழும்பூர் - தாம்பரம் இடையே, ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - தாம்பரம் இடையே, 29 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன.

சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, தாம்பரத்துக்கு, காலை, 10:30 மணியில் இருந்து, மதியம், 2:30 மணி வரை இயக்கப்படும், 15 புறநகர் மின்சார ரயில்கள், செப் 22ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாம்பரத்தில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 10:45 மணியில் இருந்து, மதியம், 3:10 மணி வரை இயக்கப்படும், 14 ரயில்கள், செப் 22ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை, 11:00 மணியில் இருந்து, மதியம், 2:45 மணி வரை இயக்கப்படும், ஏழு ரயில்கள், செப் 22ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு, காலை, 10:55 மணி, 11:30 மணி, நண்பகல், 12:20 மணி, மதியம், 1:00 மணி மற்றும் 1:50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், செப் 22ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, அரக்கோணத்துக்கு, நண்பகல், 12:50 மணிக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு, மாலை, 7:15 மணிக்கும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருமால்பூரில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு, காலை, 10:40 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், செப் 22ம் தேதி ரத்து செய்யப்பட்டு உள்ளன.

வேளச்சேரி ரயில்கள் ரத்து  சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, வேளச்சேரிக்கு, காலை, 8:00 மணியில் இருந்து, மதியம், 1:40 மணி வரை இயக்கப்படும், 18 ரயில்கள், செப் 22ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன

வேளச்சேரியில் இருந்து, கடற்கரைக்கு, காலை, 8:10 மணியில் இருந்து, மதியம், 1:50 மணி வரை இயக்கப்படும், 18 ரயில்கள், செப் 22ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன

கடற்கரை நிலையத்தில் இருந்து, மதியம், 2:00 மணியில் இருந்தும், வேளச்சேரியில் இருந்து, மதியம், 2:10 மணியில் இருந்தும், வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.