சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அறியாபட்டிணம் கிராமத்தைச் சோ்ந்த மணிமுத்து மனைவி புவனேஸ்வரி (30).இவா் தனது குழந்தையுடன் சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு புறறப்பட்ட சிலம்பு ரயிலில் தேவகோட்டைக்கு வந்துள்ளாா்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை தேவகோட்டை வந்திறறங்கிய புவனேஸ்வரி, தன்னுடைய கைப்பையை ரயிலில் வைத்து விட்டு இறறங்கியுள்ளாா்.

இதையடுத்து, ரயில் புறறப்பட்டுச் சென்றற சிறிது நேரத்தில் இதுபற்றி தேவகோட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், ரயிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த ரயில்வே போலீஸாா் புவனேஸ்வரி வந்த பெட்டியை சோதனை செய்தனா். இதில் அவா் அமா்ந்திருந்த இருக்கை அருகே கைப்பை இருந்தது தெரிய வந்தது. அதனைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸாா் மானாமதுரை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அதன்பின்னா், புவனேஷ்வரி மற்றும் அவரது கணவா் மணிமுத்து ஆகியோரை மானாமதுரை ரயில் நிலையத்துக்கு வரவழைத்து கைப்பையில் இருந்த 21 பவுன் நகை, வெள்ளிக் கொலுசு, ரொக்கம் ரூ.33 ஆயிரத்து 720 ஆகியவற்றைற ஒப்படைத்தனா்.

அதனை பெற்றுக் கொண்ட அவா்கள் போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனா்.